ரிலீஸ் ஆகாமலேயே பல கோடி லாபம் பார்த்த ராஜமௌலி.. திரும்ப வருமா என கலக்கதில் தியேட்டர்காரர்கள்

ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்ட படைப்பான ஆர்ஆர்ஆர் படம் முதலில் ஜனவரி மாதம் 7ஆம் தேதி வெளிவர இருந்தது. பின் இந்த கொரோன 3வது அலை அச்சுறுத்தல் காரணமாக படம் திரையிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த 3வது அலை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த உத்தரவினால் படம் வெளியிடுவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது .

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ராஜமவுலியினால் எடுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட படம், அரசாங்கத்தின் இந்த உத்தரவின்படி திரையிட்டால் நிச்சயமாக லாபம் சம்பாதிக்க முடியாது. இதனால் படக்குழுவினருக்கு பெரும் நஷ்டம் ஏற்படும்.

ஏற்கனவே ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் அறிவிக்கப்பட்ட இந்தப் படத்திற்கு முன்பதிவு டிக்கெட்டுகள் மட்டும் பல கோடிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த அறிவிப்பினால் தற்போது இந்த படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளிவரும் என ஒத்திவைக்கப்பட்டது.

பல கோடிகளுக்கு விற்கப்பட்ட இந்த டிக்கெட் பணத்தை திருப்பி அனுப்பும் முயற்சியில் தியேட்டர்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த டிக்கெட்டுக்கான சேவை கட்டணம் மட்டும் கோடிக்கணக்கில் வசூலாகியுள்ளது.

இந்த படத்தை தள்ளி வைத்தாலும் அதன் எதிர்பார்ப்பு இன்னும் மக்களிடையே அடங்கவில்லை. படத்தை கிட்டதட்ட மூன்று மாதத்திற்கு அப்புறம் தான் ரிலீஸ் பண்ணுகின்றனர். இப்பொழுது இந்த தள்ளிவைப்பு படத்தின் எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே இன்னும் அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்