fbpx
Connect with us

Cinemapettai

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிய பாடகி! தக்க சமயத்தில் உதவிய ஆட்டோ டிரைவர்! நெகிழ வைத்த சம்பவம்!

actress_cinemapettai

இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிய பாடகி! தக்க சமயத்தில் உதவிய ஆட்டோ டிரைவர்! நெகிழ வைத்த சம்பவம்!

தன் ஆட்டோவில் பயணம் செய்த பயணி யார் என்று தெரியாமலே அவசர சூழ்நிலையில் ஆட்டோ டிரைவர் பணம் கொடுத்து உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஆட்டோவில் பயணம் செய்த பாடகி வரிஜாஸ்ரீ கூறுகையில், நான் பெங்களூரை சேர்ந்தவர். பாடகியான நான் இத்தாலியில் ஒரு மியூசிக் ஷோ பண்ண இருக்கிறேன். அதற்காக விசா இண்டர்வியூ ஏப்ரல் 11ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது.

விசா இன்டர்வியூக்கு ரூ.5000 ஆகும்னு தெரியும். விசா இன்டர்வியூவில் கிரெடிட், டெபிட் கார்டுகளை ஏத்துக்க மாட்டாங்கன்னும் தெரியும். கையில் ரொக்கமாக 2000 ரூபாய் இருந்தது. இன்டர்வியூக்கு தேவையான மீதி பணத்தை ஏடிஎம்மில் எடுத்து கொள்ளலாம் என்று அவசரமாக கிளம்பிட்டேன்.

என்கிட்ட இருந்த பணத்தை வைத்து ஹைதராபாத் சென்று விட்டேன். அங்கிருந்து இன்டர்வியூக்கு நேரமாகி விட்டதால் விசா ஆபிஸுக்கு ஆட்டோ பிடித்து சென்றேன்.

போகும் வழியில் பத்து, பதினைந்து ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முயற்சி பண்ணினேன். ஆனால் எந்த ஏடிஎம்மிலும் பணம் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தேன்.

ஸ்வைப் மிஷின் இருக்கும் கடைகளில் ஏறி இறங்கி கையில் இருந்த கிரெடிட், டெபிட் கார்டுகளை கொடுத்து எனக்கு அவசரமாக 3000 ரூபாய் தேவைப்படுகிறது கொடுங்கன்னு கேட்டேன். ஆனால் யாரும் உதவ முன்வரவில்லை.

இன்டர்வியூக்கு வேற நேரமாகிட்டே இருந்ததால் எனக்கு டென்ஷனாகி கொண்டே இருந்தது. இந்நிலையில் நான் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் என்னுடைய நிலைமைய பார்த்து, என்னிடம் 3000 ரூபாய் இருக்கு. உங்க விசா இன்டர்வியூவை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பின பிறகு தாங்க என கூறி பணத்தை என்னிடம் கொடுத்தார்.

நானும் அவர் கொடுத்த 3000 ரூபாயை வாங்கி கொண்டு விசா இன்டர்வியூவை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு திரும்பியவுடன் அவருக்கு பணத்தை திருப்பி கொடுத்தேன். அவர் பெயர் பாபா.

எதையும் எதிர்பார்க்காமல், யார் என்றும் தெரியாமல் அவசரமான சூழ்நிலையில் உதவிய ஆட்டோ டிவைர் பாபா மாதிரியான மனிதர்களால் தான் உலகம் இன்னும் இயங்கி கொண்டு இருக்கிறது.

இந்த சம்பவம் எனக்கு பாடமாகவும், அதே சமயம் அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறது. அதனால் அந்த ஆட்டோ டிரைவர் பாபாவுடன் செல்பி எடுத்து பேஸ்புக்கில் ஷேர் பண்ணினேன்.

இதனை பார்ப்பவர்கள் இவரை போன்று முகம் தெரியாத மனிதர்கள் யாராவது கஷ்டப்படும் போது உதவி புரிவார்கள் என்பதால் தான் பேஸ்புக்கில் ஷேர் பண்ணிக்கிட்டேன் என்று நெகிழ்ச்சியுடன் வரிஜாஸ்ரீ தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top