கிறிஸ்டியானோ ரொனால்டோ டோஸ் சந்தோஸ் அவிரா பெப்ரவரி 5, 1985 இல் பிறந்தவர். போர்த்துகீச கால்பந்து அணியின் வீரர், அந்த அணியின் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். 33 வயதாகிறது. தற்பொழுதுவிளையாடிவரும் கால்பந்து வீரர்களிலேயே ஒரு கிளுப்பால் அதிகம் விலைகொடுத்து வாங்கப்பட்ட வீரர் இவர் தான். மாண்சாஸ்டர் யுனைட்டட் கிளுப்பில் இருந்து ரியல் மாட்ரிட் மரியா பொழுது இவருக்கு வழங்கப்பட்டது 132 மில்லியன் அமேரிக்க டாலர்களாகும் . அதுமட்டுமன்றி இவருக்கு ஒப்பந்தமாகியுள்ள 6 வருடங்களுக்கும் தலா 18 மில்லியன் அமேரிக்க டாலர்கள் கிடைக்கும்.

CR – 7

சமீபத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு ஜுவென்ட்ஸ் அணிகளும் முதல் லெக் கால் இறுதி போட்டியில் மோதினர். இப்பொடியை மாட்ரிட் 3 – 0 என்ற கணக்கில் எளிதில் வென்றது. இதில் ஆட்டம் ஆரம்பித்த மூன்றாவது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். பின்னர் இரண்டாம் பாதியில் 64 ஆம் நிமிடத்தில் தான் இந்த அசத்திய கோலை சத்தியம் ஆக்கினார். சைக்கிள் கிக் (BICYCLE KICK ) என்று சொல்லப்படும் இந்த ஸ்டைலில் கோல் அடித்தார். மாட்ரிட் அணியின் மானேஜர் ஜிடேனே ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது.

இதோ கோலின் வீடியோ ..

எதிர் அணி ரசிகர்கள் கூட எழுந்து நின்று கை தட்டி ஆரவாரம் செய்தனர்.