fbpx
Connect with us

Cinemapettai

காதல் ஜோடியின் கேவலமான காரியம்.. ஆள் இல்லாத வீடுகளில் நுழைந்து.. ஷாக்கான போலீஸ்

Tamil Nadu | தமிழ் நாடு

காதல் ஜோடியின் கேவலமான காரியம்.. ஆள் இல்லாத வீடுகளில் நுழைந்து.. ஷாக்கான போலீஸ்

சென்னை: சென்னையில் பாலிசி வைத்து திருடி வந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த காரம்பாக்கம் பகுதியை சேர்ந்த தம்பதி ஜெகதீஷ் பாண்டியன் – ரேவதி. இவர்களது வீட்டில் கடந்த 21-ந்தேதி 4 பவுன் நகை காணாமல் போனதாக புகார் அளித்தனர்.

இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, 2 பேர் சிக்கினர். இருவரும் சர்வசாதாரணமாக ரேவதியின் வீட்டுக்குள் நுழைந்து, வெளியே வருவதும் தெரியவந்தது.

இந்த வீடியோவை பார்த்த ரேவதி “அந்த பையன் என் சொந்தக்கார பையன் கார்த்திக்தான்” என்று சொல்லியிருக்கிறார். கார்த்திக் – நித்யா என்ற காதலர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.. இருவருக்குமே வீட்டை பூட்டிவிட்டு சுவர் ஓரமாக சாவியை வைத்துவிட்டு போகும் உறவினர் வீடுகளை குறிவைத்து திருடி இருக்கிறார்கள். அதாவது ஆள் இல்லாதை நோட்டமிட்டு வீடுகளின் பூட்டை திறந்து நகை, பணத்தை இந்த காதல் ஜோடி திருடி வந்திருக்கிறது.

இருவரும்.. ஒரே காலஜில் என்ஜினீயரிங் படித்துள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தும் வருகிறார்கள். ஆனால் வருமானம் போதவில்லை என்று சொல்லி இந்த கேவலமான காரியத்தை செய்து வந்திருக்கிறார்கள் கொள்ளை அடிப்பதில் ஒரு பாலிசி வைத்திருக்கிறார்கள். எப்படி என்றால், சொந்தக்காரர் வீடுகளாக பார்த்துதான் திருடுவார்களாம்.

வெளியில் திருடினால் மாட்டி கொள்ள வாய்ப்பு என்பதால்தான் இந்த பாலிசியை கடைபிடித்து வந்திருக்கிறார்கள். இதுவரை இவர்கள் மாட்டியதில்லையாம். டூப்ளிக்கேட் சாவியை ரெடி செய்து உறவினர்களின் வீடுகளின் ஆட்டையை போட்ட இருவரும் திருடிய பணத்தில் ஜாலியாக இருந்துள்ளனர். இப்போது இருவரும் சிறையில் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top