Tamil Nadu | தமிழ் நாடு
சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் இன்று..
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மூன்று மாநிலங்கள் போலீஸ் கண்ணிலும் விரல்விட்டு ஆடியவர் வீரப்பன். ஐந்து பேர் துணைகொண்டு சத்தியமங்கலம் காட்டில் யாரும் நுழைய முடியாத அளவுக்கு பலம் கொண்டவர்.
சந்தன மரங்களை கடத்தல்,யானை தந்தங்களை கடத்தல், விலங்குகளின் தோலை கடத்தல் போன்ற வழக்குகள் இருந்தாலும் அங்கே உள்ள மக்கள் அவரை புகழ்வார்கள். துணை ராணுவ படை வந்தாலும் பிடிக்க முடியாத ஒரே நபர் என்றால் அது காட்டு மன்னன் வீரப்பன் தான்.
ஆனால் சில சூழ்ச்சிகளால் ஐபிஎஸ் விஜயகுமார் திட்டம் போட்டு சுட்டு தள்ளப்பட்டார். இது உண்மையா? இல்லை அவரை ஏமாற்றி ஓரிடத்தில் கொண்டுவந்து எல்லா உண்மைகளையும் சொல்ல வைத்து அவரது கடத்தல் மூலம் சம்பாதித்த பணம் எங்கே உள்ளது. உங்களுக்கு பின்புறமாக யார் இருந்தார்? என ஒவ்வொன்றையும் வீடியோவில் ரெக்கார்டு செய்துதான் அங்கே அவரை சுட்டுத்தள்ளி ஒரு ஆம்புலன்ஸில் போட்டு, வரும் வழியில் சுட்டதாக தான் தகவல் தெரிவித்தனர்.
சாதாரண சந்தன கடத்தல் மன்னனாக இருந்த வீரப்பன் கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திய பிறகுதான் உலகம் முழுதும் அறியப்பட்டார். அவரை கடத்தியது ஏன்? அவருக்கும் வீரப்பனுக்கு என்ன சம்பந்தம்? காட்டில் வெட்டப்படும் மரங்கள் யானை தந்தங்கள் யார் மூலம் வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டனர்.
ஒரு காட்டில் இருந்து ஒரு மரத்தை கடத்த வேண்டும் என்றாலே எத்தனை போலீசை தாண்டி போக வேண்டும். எத்தனை ஊர்களை தாண்டி துறைமுகம் வரவேண்டும். துறைமுகத்தில் சோதனைகள் வெளிநாட்டில் சோதனைகள் இதையெல்லாம் பார்த்தால் நாட்டிலே பல கேடிகள் உள்ளனர். அவரை பிடிப்பதை விட்டுவிட்டு காட்டிற்கு பாதுகாப்பாக இருந்த வீரப்பனை சுட்டு தள்ளிய தினம்.
