India | இந்தியா
தற்கொலையின் போது எதிர்பாராத விபத்தால் இன்னொரு கொலை..
அகமதாபாத் சூரத் நகரை சேர்ந்த மம்தா ரதி என்ற பெண் கடந்த சில நாட்களாக உடல் நல பாதிப்பால் அவதிப்பட்டு உள்ளார். இதனால் மனமுடைந்த மம்தா ரதி தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தான் குடியிருக்கும் 13வது மாடியில் இருந்து கீழே குதிக்க முடிவெடுத்துள்ளார். அவர் கீழே குதிக்கும் பொழுது கீழே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பாலு என்ற முதியவர் நடைப்பயிற்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது சற்றும் எதிர்பாராத நிலையில் மம்தா ரதி அந்த முதியவர் மீது விழுந்தார். நிலை தடுமாறிய கீழே விழுந்த முதியவர் மற்றும் பலத்த காயத்துடன் விழுந்த மம்தா ரதி ஆகியோரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல்தெரிவிக்கபட்டது. இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த உயிரிழப்பு சம்பவம் அங்கு உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
