Connect with us

Cinemapettai

crime-news-in-tamil

India | இந்தியா

காந்தி ஜெயந்தி விடுமுறை.. வாங்கி வச்ச மதுபாட்டில் மாயம்.. நிர்வாணமாக்கி தந்தையை தாக்கிய குடிகார மகன்

கேரளாவில் காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று மகன் வாங்கி வைத்த மதுபாட்டிலை தந்தை குடித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன் தாயார் கண் முன் தந்தையை நிர்வாணமாக்கி அடித்து உதைத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

“எனக்குத் தெரியாது. நான் அதை எடுக்கவில்லை” என்று பயந்துபோன தந்தை தனது மகனிடம் மன்றாடுவதைக் அந்த வீடியோவில் பார்க்க முடியும். ஆனாலும் விடாத மகன் தந்தையை அடித்து நொறுக்கினார்.

காந்தி ஜெயந்தி அன்று மதுபாட்டில் கிடைக்காது என்பதற்காக மகன் வாங்கி வைத்திருந்த ஒரு மதுபாட்டிலைக் காணாமல் போனதால் மகன் கோபமடைந்து தந்தையை தாக்கி இருக்கிறார். அந்த நபர் தனது தந்தையை தனது தாயின் முன் கொடூரமாக அடித்து நொறுக்கியுள்ளார். இதை பார்த்த தாய், மகனை சமாதானம் செய்ய முயல்வதும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது. பின்னர் தந்தை மகனிடம் மன்னிப்பு கேட்பதோடு, காட்சி முடிகிறது.

இது தொடர்பாக கேரளா போலீசார் நடத்திய விசாரணையில் மாவேலிக்கரையை சேர்ந்த ரத்தீஷ் (வயது29), அவரது தந்தை என்பதும் என்பது தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top