விடிய விடிய கூத்து, பெண்களுடன் பார்ட்டி.. அடங்காத வீரர்களுக்கு ஆப்பு வைத்த தோனி

பல கோடி ரூபாய் புரளும் ஐபிஎல் போட்டிகள் என்றாலே வீரர்கள் குஷியாகி விடுவார்கள். ஒரு பக்கம் பணம் மறுபக்கம் கேளிக்கை விருந்து என்று அந்த சீசனை வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களை குஷிப்படுத்தும் அளவிற்கு இந்த பார்ட்டிகள் இருக்கும். பொதுவாக போட்டிகள் அனைத்தும் மதிய வேளையில் ஆரம்பித்து இரவு 11-12 மணி வரை நடைபெறும்.

ஒவ்வொரு போட்டி முடிந்தவுடன் வீரர்கள் தூங்கச் செல்வதற்கு முன்பாக பார்ட்டியில் கலந்து கொள்வது வழக்கம். இந்த கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது அப்போது கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த லலித் மோடி தான்.

Parties
Parties

லலித் மோடியுடன், கிங்பிஷர் ஓனர் விஜய் மல்லையாவும் கூட்டு சேர்ந்து ஐபிஎல் போட்டிகளை ஒரு திருவிழா போல நடத்துவார்கள். இவர்கள் நடத்தும் பார்ட்டியில் வெளிநாட்டு வீரர்கள் மட்டுமல்லாது நம் இந்திய வீரர்களும் தவறாமல் கலந்து கொள்வார்கள்.

12 மணிக்கு மேல் ஆரம்பிக்கும் இந்த பார்ட்டி விடிய விடிய நடைபெறும். மது அருந்திக்கொண்டும், பெண்களுடன் ஆடிக்கொண்டும் காலையில் வரை இந்த பார்ட்டியை செம்மையாக முடித்த பின்னரே வீரர்கள் அறையில் வந்து தூங்குவார்கள்.

Party2
Party2

ஒரு கட்டத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தோனி மற்றும் சச்சின் டெண்டுல்கர், பத்திரிகை பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே இந்த பார்ட்டிகளை நிறுத்துமாறு அறிவுரை வழங்கினார்கள். வீரர்களின் உடம்பிற்கு இது நல்லதல்ல, அவர்கள் தூக்கமின்றி விளையாட முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதன் பின்னரே இந்த வகை பார்ட்டிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்தந்த அணி நிர்வாகம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்