fbpx
Connect with us

Cinemapettai

விஜய் சேதுபதியின் பட வசனத்தை தன் ட்விட்டரில் ஷேர் செய்த அர்னால்ட். ஆகான்னு சொன்ன ரசிகர்கள்.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் பட வசனத்தை தன் ட்விட்டரில் ஷேர் செய்த அர்னால்ட். ஆகான்னு சொன்ன ரசிகர்கள்.

விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் பட ட்ரைலர் வாசகத்தை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ரசல் அர்னால்ட்.

விஜய் சேதுபதியின்  சூப்பர் டீலக்ஸ்

ஆரண்யகாண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் வெளியாக உள்ள படம். விஜய் சேதுபதியுடன் இணைந்து, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, மிஷ்கின், மிருணாளினி என பலர் நடித்துள்ளார்கள் மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் ஷில்பா என்ற பெயரில் நடித்துள்ளார், அவர் பேசுவது போன்றே துரத்திய ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

super deluxe

super deluxe

ரசல் அர்னால்ட்


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். தற்பொழுது கமெண்ட்ரியில் பிஸியாக உலகம் சுற்றி வருபவர்.

இவர் தான் தன் ட்விட்டரில் இந்த வசனத்தை ஷேர் செய்துள்ளார். இது பல லைக்ஸ் குவித்து வருகின்றது. மேலும் படத்துக்கும் நல்ல மார்க்கெட்டிங் ஆக அமைந்து விட்டது.

இதே போல இன்னும் சில டீவீட்டுகள் தட்டும் பட்சத்தில் கூடிய சீக்கிரம் இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் போல இவருக்கும் தமிழகத்தில் ரசிகர் வட்டம் உருவாகி விடும் என்றே தோன்றுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top