Sports | விளையாட்டு
நங்கூரம் மாதிரி நின்ற புஜாரா.. அவுட் ஆகவே மாட்டியா? புலம்பிய ஆஸ்திரேலியா வீரர்
நங்கூரம் மாதிரி நின்ற புஜாரா
பூஜாராவை பார்த்து ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர் நேதன் லயன் என்பவர் எவளோ நேரம் விளையாடிட்டு இருக்கியே உனக்கு போரடிக்கவில்லை என கேட்டுள்ளார். இதனை அந்த ஊடகம் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இத்தகவலை பகிர்ந்துள்ளது.
இந்திய ஆஸ்திரேலியாவுடனான நான்காவது கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மூன்று போட்டிகளில் நிறைவடைந்தது இரண்டு போட்டிகள் இந்தியாவின் வெற்றி பெற்று ஒரு போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. அதனால் இந்தியா மூன்றுக்கு இரண்டு என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.
71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் எந்த வெற்றியும் பெறவில்லை. ஆனால் நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
மயங்க் அகர்வால் ராகுல் களத்தில் இறங்கி முதலில் விளையாடினர். கே.எல்.ராகுல் 9 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மயங்க் அகர்வால் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். லியோன் பந்துவீச்சில் ஸ்டாரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய விராட் கோலி நின்றுவிடாமல் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதற்குப்பின் களமிறங்கிய துணை கேப்டனாக ரஹானே 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வரிசையாக விக்கெட்டுகள் போக புஜாரா நின்று அபார சதம் அடித்தார். இது அவருக்கு 18 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்த தொடரில் மூன்றாவது சதமாகும். விராட் கோலியின் அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
