ஜல்லிக்கட்டு போராட்டம்: முகமத் கைஃப் ட்விட்டரில் ஆதரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாட்டின் சகோதரர்களுக்கு தனது ஆதரவை அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வீர்ர் முகமத் கைஃப் தெரிவித்துள்ளார்.
பீட்டா அமைப்பால் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி தமிழ் நாடு முழவதும் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். இளைஞர்களின் இந்தப் போராட்டத்துக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமத் கைஃப் ஜல்லிக்கட்டுக்கான தனது ஆதரவை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
What intensity and devotion in brothers of Tamil Nadu !
Really support their ability to love and be devoted to their cause— Mohammad Kaif (@MohammadKaif) January 16, 2017
Peace and Non-violence are the best and only way to protest. Request brothers in Tamil Nadu to maintain peace and lead as always by example.
— Mohammad Kaif (@MohammadKaif) January 18, 2017
இதுகுறித்து கைஃப் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டு இளைஞர்களின் தீவிர போராட்டத்தை கண்டு வியப்படைகிறேன். அவர்களது நியாயமான போராட்டத்தை ஆதரிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து முகமத் கைஃப்புக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் பலர் தங்களது நன்றியை தெரிவித்துக் வருகின்றனர்.
