India | இந்தியா
கோப்ரா படத்தில் பதானுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி தெரியுமா.. சீனாவின் கனெக்ஷன் இருக்குது மக்களே
டெமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படமே கோப்ரா. ஒருபுறம் விக்ரம் ஏழு கெட் அப் என்கின்றனர், மறுபுறமோ 20 க்கு மேற்பட்ட லுக்கில் வருவார் என்கின்றனர். எனினும் எதுவும் உறுதி செய்யப்படாத தகவல் தான். எனினும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானர் படமாம் இது. கதைக்கு தேவை என்பதனால் தான் இந்த பல லுக்குகளாம் .
இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், நடிக்க நேர்ந்தது பற்றிய சுவாரஸ்ய தகவலை இயக்குனர் சமீபத்திய தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.
படத்தில் மிகவும் இறுக்கமான இன்டர்போல் அதிகாரி ரோல் இருந்ததாம். மக்களுக்கு அதிகம் பரிச்சயம் உள்ள ஒருவரை தான் நடிக்க வைக்க வேண்டும், அப்பொழுது தான் அந்த கதாபாத்திரம் ஸ்ட்ராங் ஆக இருக்கும் என முடிவெடுத்தாராம் இயக்குனர்.
யாரை கமிட் செய்யலாம் என யோசித்த நேரத்தில் பதானின் டிக் டோக் விடியோவை பார்த்துள்ளார். இவர் யோசித்து மற்றவர்களிடம் ஆலசோனை கேட்க, படக்குழுவும் ஓகே சொல்ல பதானை நேரில் சந்தித்துள்ளார் இயக்குனர். முதலில் தயங்கிய இர்பான் பின்னர் ஓகே சொன்னாராம்.
முதல் நாள் ஷூட்டிங்கில் மட்டும் தான் சற்று தடுமாறினாராம், பிறகு அணைத்து காட்சிகளையும் ஒரே டேக்கில் முடித்து கொடுத்தாராம்.
சென்னையில் MRF அகாடமியில் இருந்த நேரத்தில் பல தமிழ் படங்களை பார்த்தவராம் இர்பான் பதான். இதனால் ஈஸியாக அவரால் நடித்து விட முடிந்தது என்கிறார் இயக்குனர்.
