fbpx
Connect with us

Cinemapettai

உலகப் புகழ்பெற்ற தனுஷ் பாடலுக்கு டிக் டாக் செய்த வார்னர்.. தனுஷ்கே டப் கொடுப்பார் போல

Videos | வீடியோக்கள்

உலகப் புகழ்பெற்ற தனுஷ் பாடலுக்கு டிக் டாக் செய்த வார்னர்.. தனுஷ்கே டப் கொடுப்பார் போல

ஆஸ்திரேலிய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் ஆக வலம் வருபவர் டேவிட் வார்னர். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளிலும் தற்போது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

டேவிட் வார்னர் சமீபகாலமாக டிக் டாக் செய்வதில் பெரிதும் ஆர்வமாகி காணப்படுகிறார். ஹைதராபாத் அணியான சன்ரைசர்ஸ் தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டதால் தெலுங்கு பாடல்களுக்கு டிக் டாக் செய்து வந்தார்.

தெலுங்கு முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், பிரபாஸ், மகேஷ்பாபு, ஜூனியர் என்டிஆர் போன்ற நடிகர்களின் ஹிட் பாடல்கள் ஆன புட்ட பொம்மா, மைன் பிளாக், பக்கா லோக்கல், பாகுபலி போன்ற பாடல்களுக்கு டிக்டாக்வீடியோ வெளியிட்டார்.

இந்த வீடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல் பல கிரிக்கெட் வீரர்களுக்கும் இவரது டிக் டாக் வீடியோக்கள் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் தனுஷின் உலகப் புகழ்பெற்ற வொய் திஸ் கொலவெறி டி பாடலுக்கு செய்து தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமா நடிகர்களில் தனுஷ் பாடலுக்கு மட்டுமே அவர் டிக் டாக் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top