ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாண்டியா பிரதர்ஸூக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் அட்வைஸ் செய்துள்ளார்.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் புள்ளி பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தை பிடிப்பதற்கு அந்த அணியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா – கர்ணூல் பாண்டியா பிரதர்ஸ் மிக முக்கிய காரணம்.

மிக ஒற்றுமையாக இருந்த இவர்கள் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, இருவரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பாண்டியா பிரதர்ஸின் சண்டையை பார்த்து ஓடோடி வந்த முன்னாள் வீரர் சேவாக் “பணத்தை விட உலகில் எதுவும் முக்கியமில்லை. தந்தை, சகோதரன் உள்பட என்ற பாடலை நினைவில் வைத்து கொண்டு சண்டையை நிறுத்துங்கள்” என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

தி கிரேட் சேவாக்!