2018-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய விளையாட்டு போட்டியிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் இந்தோனேசிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்காக போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

அதிகம் படித்தவை:  இந்த வருடம் இலங்கை கிரிகெட் அணியை புரட்டி எடுத்த இந்தியா விவரம் உள்ளே!

2018 ஆசியப் போட்டியில் 493 விளையாட்டுகள் 431-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதில் கிரிக்கெட், சர்ஃபிங், ஸ்கேட் போர்டிங்,  போன்ற விளையாட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. ஆசியப் போட்டிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் நிகழ்ச்சியின் செலவுகளை கணிசமாகக் குறைக்கும் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.