இது வரை மறைக்கப்பட்ட 10 கிரிக்கெட் சாதனைகள்.. ரசிகர்களை வியக்க வைத்த வீரர்கள்!

கிரிக்கெட் இங்கிலாந்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விளையாட்டு. அன்று முதல் இன்று வரை இந்த விளையாட்டில் பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, அவற்றுள் இதுவரை தெரியாத சாதனைகளை இவற்றில் காண்போம்.

இலங்கை அணி: கிட்டத்தட்ட 40 ஆண்டு கால வரலாற்றில் ஒரே ஒரு முறை மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரை இலங்கை அணி வென்றுள்ளது.

ஆடம் கில்கிறிஸ்ட்: இவர் ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பர் 1999 தொடங்கி 2008 வரை கிட்டத்தட்ட 96 டெஸ்ட் போட்டிகளில் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து விளையாடியுள்ளார்.

இன்சமாம் உல் ஹக்: இவர் ஒருநாள் போட்டியில் தான் வீசிய முதல் பந்திலேயே பிரயன் லாரா விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இவர் பவுலிங் போடுவதில்லை. ஆனால் இவர் எடுத்த முதல் விக்கெட் பிரைன் லாரா விக்கெட் என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

கிறிஸ் மார்ட்டின் மற்றும் பி எஸ் சந்திரசேகர்: இவர்கள் இருவரும் தான் அடித்த ரன்களை விட அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பவுலர்கள். டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கிரிஸ் மார்ட்டின் 123 ரன்களும் 233 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.சந்திரசேகர் 167 ரன்கள் மற்றும் 242 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ஜிம் லேகர்: இங்கிலாந்து அணியின் ஸ்பின் பவுலர் இவர். ஒரேடெஸ்ட் போட்டியில் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

பத்தாவது இடத்தில் இறங்கி: லேன்ஸ் க்லுஸ்நர், அப்துல் ரசாக், சோயிப் மாலிக் மற்றும் ஹசன் திலகரத்னே  இவர்கள் நான்கு பேரும் கிரிக்கெட்டில் 10 போசிஷன்லையும் விளையாடியவர்கள்.

சச்சின் டெண்டுல்கர்: 1989 ஆம் ஆண்டில் இவருடன் சேர்ந்து 23 விளையாட்டு வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர். ஆனால் டெண்டுல்கர் மட்டுமே கடைசியாக ரிட்டையர் ஆகி உள்ளார்.

sachin-cover
sachin-cover

கிரேம் ஸ்மித்: தென் ஆப்பிரிக்க வீரரான இவர் 100 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்த வரலாற்று பெருமை பெற்ற ஒரே வீரர்.

வாசிம் அக்ரம்: டெஸ்ட் போட்டிகளில் 257 ரன்கள் அதிகபட்சமாக பெற்றுள்ளார். டெண்டுல்கரின் 248 ரன்களை விட அதிகம்.

சையத் அஜ்மல்: இவர் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பவுலர். ஆனால் இவர் ஒருமுறை கூட மேன் ஆப் தி மேட்ச் வாங்கியதில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்