Sports | விளையாட்டு
அரசியல் ரீதியாக தோனி பழி வாங்கப்படுகிறாரா..? பின்னணி என்ன.. அதிர்ந்து போன ரசிகர்கள்
டெல்லி: கிரிக்கெட் தோனியின் பெயர் பிசிசிஐ கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு பின் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.
அண்மையில் நடந்த ஜார்க்கண்ட் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்தது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.
முன்னதாக ஜார்க்கண்ட் தேர்தலில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனியை களமிறக்க பாஜக நினைத்ததாம். டெல்லியில் கம்பீரை இறக்கியது போல் தோனியை அவரது சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் களமிறக்க விரும்பியதாம்.
ஆனால் இதற்கு தோனி பெரிதாக ஆர்வம் தெரிவிக்கவில்லை. தோனியை தேர்தல் பிரச்சாரம் செய்ய பாஜக அழைத்தும் என்றும் அதற்கும் அவர் ஒப்புக்கொள்ளவில்லையாம்.
இதனால் தற்போது மத்திய அரசால் தோனி பழிவாங்கப்படுகிறார் என்று காங்கிரஸ் ஆதரவாளர்கள் புகார் சொல்கிறார்கள். பிசிசிஐ அமைப்பின் செயலாளராக தற்போது உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெ ஷாதான் இருக்கிறார். இவரின் அழுத்தம் காரணமாக தோனி பழி வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
