Connect with us
Cinemapettai

Cinemapettai

IndianCricketeam-Cinemapettai

Sports | விளையாட்டு

உங்க பேவரிட் கிரிக்கெட் நட்சத்திரங்களின் பிட்னெஸ் சீக்ரெட் தெரியுமா?

வெற்றியின் மந்திரமாக பார்க்கப்படுவது பிட்னெஸ் தான். அதிலும், தற்போது களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் தங்களை பிட்டாக வைத்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

விராட் கோலி:
இப்பட்டியலில் முதலிடம் பிடித்து இருப்பவர் கோலி தான். தண்ணீரில் கூட கோலி அதீத சுத்தத்தை எதிர்பார்ப்பதால் தான் உலகின் சிறந்த கிரிக்கெட் வீரராக இருக்கிறார். அவருடைய காலை உணவு ஆம்லெட், மிளகு மற்றும் சீஸ் நிறைந்த கீரைகள், ஒரு முழு முட்டை மற்றும் சில சால்மன் மீன்கள் அல்லது பன்றி இறைச்சி. தவிர, க்ரீன் டீ மற்றும் பழங்களை அதிகம் எடுத்து கொள்வார். மேலும், சிவப்பு இறைச்சியை எடுத்துக்கொள்வார். அதிக கலோரிகளை குறைக்க கடினமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார். விராட்டின் விருப்பமான உணவு என்றால் ஜப்பானின் சூசி தானாம்.

மகேந்திர சிங் தோனி:
36 வயதாகும் தோனி உலகின் மிகச்சிறந்த தடகள வீரர்களில் ஒருவராக இருக்கிறார். அவரது இந்த எனர்ஜிக்கு முக்கிய ரகசியமாக பார்க்கப்படுவது பால் தானாம். தினசரி 4 லிட்டர் பாலை (பெரும்பாலும் பால் ஷேக் வடிவில்) அவர் எடுத்துக்கொள்கிறார். பால் பொருட்களின் நுகர்வு மூலம், தனக்கு தேவையான கால்சியம் அளவை பெறுகிறார். இதுதவிர, பட்டர் சிக்கன், சிக்கன் டிக்கா பீஸ்ஸா, கீர் மற்றும் கஜார் கா ஹல்வா ஆகியவை அவருக்கு பிடித்த உணவுகளாகும். தனது ஆற்றலை அதிகரிக்க கிரிக்கெட் மட்டுமல்லாமல் கால்பந்து மற்றும் பேட்மிட்டனும் தவறாமல் ஆடுவதை தோனி வழக்கமாக்கி கொண்டு இருக்கிறார். உடற்பயிற்சியை தவறவே மாட்டார்.

சச்சின் டெண்டுல்கார்:

லிட்டில் மாஸ்டர் சந்தேகமே இல்லாமல் உலகின் அதிசிறந்த விளையாட்டு வீரர். சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினாலும், தனது பிட்னெஸை அப்படியே தக்கவைத்து வருகிறார். உடற்பயிற்சியை விடுவதாக இல்லை. தன்னை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள டென்னிஸ் விளையாடி வருகிறார். சச்சின் ஒரு உணவு விரும்பி. சுவையான உணவுகளை சாப்பிடுவதில் மட்டுமல்ல செமையாக சமைப்பதிலும் அவர் கில்லி தான். அவருக்கு, இறால் மசாலா, தால் சவ்வால், கீமா பராத்தா, லெசி மற்றும் சில ஜப்பானிய உணவுகள் என்றால் கொள்ளை பிரியமாம்.

ரோகித் சர்மா:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும் ரோகித் சர்மா தனது உடலின் எடையை குறைத்து பிட்டாக மாறியதற்கு முட்டையையே காரணமாக சொல்கிறார். உங்களுக்கு இதில் ஒரு ஆச்சரியமே இருக்கிறது. சைவ குடும்ப பின்னணியில் இருந்து வந்த ரோகித், தற்போது ஒருநாளில் டஜன் முட்டைகளை அசால்ட்டாக சாப்பிட்டு வருகிறார். அதிலும், ஒருமுறை 25 முட்டையை சாப்பிட்டது இவரின் ட்ரேட் மார்க் சாதனையாம். இவருக்கு பிடித்த உணவு அலோ கீ பராத்தா.

ஹர்திக் பாண்டியா:

பாண்டியாவின் டயட் முட்டை மற்றும் ப்ரோட்டீன் உணவுகள் தானாம். அதிலும், இவரும் ஜிம்மே கதியென்று இருப்பவர். இது அவரின் பிட்னெஸான உடலே காட்டிக்கொடுக்கும். தவிர, விராட் கோலி போல அதிகம் க்ரீன் டீ எடுத்து கொள்வதை தவறியதே இல்லையாம்.

சுரேஷ் ரெய்னா:

ரெய்னாவிற்கு பர்கர் என்றால் கொள்ளை பிரியமாம். அதிகமாக எடுத்துக்கொண்டால் கூட அதற்கு ஈடாக உடற்பயிற்சியை அதிகரித்து விடுவாராம். யோகா, கால் பயிற்சி, எடை தூக்குதல் என ரெய்னாவின் ஸ்டைல் மற்றவர்களை விட வேறுபடும் என்றே கூறப்படுகிறது.

ஷிகர் தவான்:

மூன்று குழந்தைகளின் அப்பாவான தவான் சரிவிகித அளவில் உணவை எடுத்து கொள்பவர். வதக்கிய காய்கள், ப்ரோகோலி, மீன் மற்றும் தந்தூரி சிக்கன் இவரின் பேவரிட் உணவுகளில் முதலிடம். வாரத்திற்கு மூன்று நாட்கள் ஜிம்மில் மட்டுமே நேரத்தை செலவழிக்கும் அளவிற்கு தீவிர பயிற்சி எடுப்பவர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top