நடிகர் விஜய்சேதுபதி தமிழ் சினிமாவின் உச்சிக்கு போய்க்கொண்டு இருக்கிறார்,அவரின் படங்களை பார்க்க நம்பி போகலாம் என கூறுகிறார்கள் ரசிகர்கள் அந்த அளவிற்கு ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்துவிட்டார்.

அதேபோல் நடிகர் விஜய் சேதுபதி வருடத்திற்கு  4 ல் இருந்து 7 படங்கள் வரை ரிலீஸ் செய்துவிடுகிறார்,மேலும் வருடத்திற்கு அதிக ஹிட் கொடுக்கும் நடிகர் என்றல் அது விஜய்செதுபதி என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரங்களில்.

vijay-sethupathy

இந்த வருடத்தில் வருசைகட்டி நிற்கும் விஜய்சேதுபதி படங்கள் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன்,இமைக்கா நொடிகள்,ஜுங்கா,96,,சூப்பர் டிலக்ஸ்,மணிரத்னம் படம் என அடுத்து அடுத்து ரிலீஸ் ஆகும் படங்கள்.

vijaysethupathy

நடிகர் விஜய் சேதுபதி தனக்கென்ன தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை தேடிகொண்டார் .இவர் நடித்து வெளிவந்த விக்ரம் வேதா படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்ப்பை பெற்றது  தொடர்ந்து அவரது நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது.

vikram vedha

இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழு ஒரு வித்தியாசமான முயற்ச்சியை கையில் எடுத்துள்ளது,அது என்னவென்றால் இந்த வருடம் 2018-ல் ஜனவரி மாதம் 5,6 தேதிகளில் கலைநிகழ்ச்சி ஒன்றை மலேசியாவில் நடத்த இருக்கிறார்கள். இதற்காக இரண்டு நாள் படபிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

vijay sethupathy

இந்த நிகழ்ச்சியில் ஒரு நல்லநாள் பார்த்து சொல்றேன் படத்தின் ஆடியோவை வெளியிட முடிவு செய்துள்ளார்கள் படக்குழு. அதுமட்டும் இல்லாமல் நடிகர்கள் பங்கேற்கும் நட்ச்சத்திர கிரிக்கெட் போட்டியில் ராம்நாடு ரினோஸ் என்ற அணியை வாங்கியுள்ளது படக்குழு.இது அனைத்தும் படத்தின் ப்ரோமோஷனுக்காக மட்டுமே.

vijay sethupathy

ராம்நாடு ரினோஸ் அணியில் நடிகர்கள் பரத், ஜி.வி.பிரகாஷ்,கௌதம் கார்த்திக், போஸ் வெங்கட், ஷாம், ஆகியோர் விளையாடுகிறார்கள். இவர்கள் அனைவரும் விஜய் சேதுபதி தலைமையில் தான் போட்டியில் இறங்குகிறார்கள்.