ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் ஹைடன் ஆஸ்திரேலிய அணிக்காக 1993ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை விளையாடினார் இவரின் அதிரடியான தொடக்கம் ஆஸ்திரேலிய அணிக்கு உறுதுணையாக இருந்தது.

இவரின் மிரட்டல் அடி எதிரணியின் பவுலர்களை நிலைகுலைய வைத்து விடும், அதிலும் இவரும் கில்கிறிஸ்ட்டும் இணைந்து எதிரணியை செய்த சம்பவங்கள் ஏராளம், இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் லாராவின் 400 ரன்களுக்கு அடுத்ததாக அதிகபட்ச ஸ்கோர் அடித்திருப்பது ஹைடன் 380 ரன்கள் ஆகும்.

இவர் கடந்த 2009ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் இந்த நிலையில் அண்மையில் ஒரு விபத்தில் சிக்கி உள்ளார் இந்த விபத்தில் தனது தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் மேலும் தற்போது நலமுடன் இருக்கிறேன் என்றும் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு தகவல் கூறியுள்ளார்.