fbpx
Connect with us

Cinemapettai

கண்ணாடில போய் உங்க மூஞ்ச பாருங்க நீங்களே:கடுப்பான ஹோல்டர்!

News | செய்திகள்

கண்ணாடில போய் உங்க மூஞ்ச பாருங்க நீங்களே:கடுப்பான ஹோல்டர்!

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்விக்கு ஒவ்வொரு வீரரும் கண்ணாடியில் தங்கள் முகத்தை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, பர்மிங்ஹாமில், பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்தது.

இதில் ‘பாலோ-ஆன்’ பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, ஒரே நாளில் 19 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்காக ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும் தங்களது முகத்தை தாங்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என கடுமையாக வசைபாடியுள்ளார்.

இதுகுறித்து ஹோல்டர் கூறுகையில்,’இந்த தோல்வி குறித்து நான் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. ஒவ்வொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும் அவர்களின் மூஞ்சியை அவர்களே கண்ணாடியில் பார்க்க வேண்டும். அப்போதாவது அவர்கள் செய்த தவறை திருக்கிக்கொள்வார்களா என தெரியவில்லை. மறுபடி இந்த தவறுகள் நடக்காமல் இருந்தால் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top