Sports | விளையாட்டு
இனி கிரிக்கெட்டில் ஊழல் இருக்காது.. கங்குலியின் அதிரடி நடவடிக்கைகள்
பிசிசிஐ புதிய தலைவராக உருவாகியுள்ள கங்குலி அதிரடியாக கிரிக்கெட்டில் ஊழல் நடக்காது என தெரிவித்துள்ளார். கங்குலியின் இந்த அதிரடிக்கு என்ன காரணம் சர்வதேச கிரிக்கெட்டில் கபில்தேவ் பிறகு இந்திய அணியை வழி நடத்த சிறந்த கேப்டன் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்ததுதான்.
இப்பொழுதுதான் கங்குலி கேப்டன் பதவி ஏற்றார். அவரது அதிரடி ஆட்டங்களும் அணியின் வெற்றிக்காக அவர் பட்ட கோபங்களும் கிரிக்கெட் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றது.
பல வெற்றிகளை கண்டார். 2003இல் உலக கோப்பை போட்டியில் இறுதி வரை சென்று தோல்வியுடன் வந்தார். கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் அப்பொழுது தான் பிரபலமானது. அதன் பிறகு வந்து ஐபிஎல் போட்டிகள் ஊழல் தலைவிரித்தாடியது.
ஐபிஎல் போட்டியில் இருந்து பல அணிகள் நீக்கப்பட்டு பிறகு சேர்க்கப்பட்டன. அப்போது பிசிசிஐ தலைவராக இருந்த ரவிசாஸ்திரி சிறப்பாக செயல்பட்டாலும் ஊழல் இல்லாமல் நிர்வகிக்க முடியவில்லை.
இப்போது அவர் பதவிக்காலம் முடிந்து கங்குலி இந்திய கிரிக்கெட்டின் புதிய பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றுள்ளதால் இனி நிர்வாகத்திலும் அதிரடி இருக்கும் என தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் பெங்கால் டைகர் சீறி பாய்வது நிச்சயம்.
