லண்டன்: இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு பிளான் எல்லாம் ரெடி, ஆனால் கேப்டன் கோலியை நினைத்தால் தான் பயமாக இருப்பதாக தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்னே மார்கல் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மெத்தனத்தில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணியை லேசாக கணித்து, சாதனை தோல்வியை சந்தித்தது.

அதிகம் படித்தவை:  இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி.! எது தெரியுமா?

இதன்மூலம் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதன் விளைவு, இந்திய அணி தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான நாளைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றால் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் நிலை ஏற்பட்டது.

அதிகம் படித்தவை:  ஒட்டு மொத்த 'கோடி’க்கும் ஒரே ’கேட்சில் ஒர்த்’ என நிரூபித்த ஸ்டோக்ஸ்!

இதுகுறித்து தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் மார்கல் கூறுகையில்,’ இந்திய அணிக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமான போட்டி. அதற்காக தென் ஆப்ரிக்க வீரர்கள் எல்லா விதத்திலும் ரெடியாக உள்ளனர். ஆனால், இந்திய அணி கேப்டன் கோலியை அவுட்டாக்க என்னிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால், முடிந்த அளவு 100 சதவீதம் திறமை வெளிப்படுத்தி வெற்றிக்கு முயற்சிப்போம்,’ என்றார்.