லண்டன்: இலங்கை அணிக்கு எதிராக இந்திய கேப்டன விராட் கோலி ‘டக்’ அவுட்டானதுக்கு பாகிஸ்தான் பெண் ஒருவர் தான் காரணம் என சமூக வலைதளத்தில் வைரலாக பரவிவருகிறது.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய மெத்தனத்தில் களமிறங்கிய இந்திய அணி, இலங்கை அணியை லேசாக கணித்து, சாதனை தோல்வியை சந்தித்தது. இப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, ‘டக்’ அவுட்டானார்.

அதிகம் படித்தவை:  இனியாவின் புது முயற்சி! மற்ற நடிகைகளும் தொடர்வார்களா?

இதற்கு பாகிஸ்தானின் பெண் விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாயினப் அப்பாஸ் தான் காரணம் என சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. இவர் இலங்கை அணிக்கு எதிரான போட்டிக்கு முன் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இதே போல, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் உடன் இதே போல அவர் செல்பி எடுத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  சிம்புவை ட்விட்டரில் வறுத்தெடுத்த அஜித் ரசிகர்கள், சிம்பு ரசிகர்கள்..!

இந்த இரண்டு போட்டியிலும், இரண்டு கேப்டன்களும் அந்ததந்த போட்டியில் ‘டக்’ அவுட்டாகினர். தவிர, அந்த இரண்டு அணிகளுமே தங்களது போட்டியில் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து
ஜாயினப் அப்பாஸை இருநாட்டு ரசிகர்களும்,கோலி, டிவிலியர்ஸ் ரசிகர்களும் கலாய்த்து வருகின்றனர். அவரும் அதை ஜாலியாக ரசித்து வருகிறார்.