இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யாவைப் பார்த்து பரிதாப படுகிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எப்படி இருந்த அவர் தற்பொழுது இப்படி மாறிவிட்டாரே என ஆச்சரியத்தில் தவிக்கிறார்கள் ரசிகர்கள்.

Sanath-Jaisurya

இவர் ஒரு காலத்தில் பேட்டால் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார் ஜெயசூரியா .இவர் 1996 ல் உலககோப்பை போட்டியை பார்த்த அனைவராலும் இவரை மறக்க முடியாத நினைவுகளை தந்து கொண்டிருப்பவர்.

Sanath-Jaisurya

இவரின் சுழற்பந்து ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும்,இவரின் அதிரடி அந்த அதிரடி பேட்டிங் தான் அனைத்து ரசிகர்களின் அதுவும் இந்த தலைமுறையின் கிரிக்கெட் ரசிகர்களிடம் இன்னும் ஹீரோவாக பேச வைத்துள்ளது.

Sanath-Jaisurya

இப்படி அதிரடி பேட்ஸ்மேனாக வளம் வந்த இலங்கை அணி ஜெயசூரியா தற்பொழுது நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் தத்தி தத்தி செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு வருத்தத்தை தந்துள்ளது.

Sanath-Jaisurya

1996 ம் ஆண்டு உலககோப்பை இலங்கை அணிக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது அந்த திருப்பு முனையை ஏற்படுத்தியவர் ஜெயசூர்யா இவர் கடைசி வரிசையில் இறங்கி கொண்டிருந்த இவரின் அதிரடி ஆட்டத்தால் முதலில் இறங்க தொடங்கினார், எதிர் அணியினரை அடித்து நொறுக்கி ஆட்டம் காண செய்தவர்.

Sanath-Jaisurya

இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 48 பந்தில் அதிவேகமாக சதத்தை அடித்தவர் இவரே, மேலும் இலங்கை அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளிலும் 445 ஒருநாள் போட்டிகளிலும் ,31 T20 போட்டிகளிலும் விளையாடினார்.

Sanath-Jaisurya

மேலும்  டெஸ்ட் போட்டியில்  14 சதங்களையும்  31 அரைசதங்களையும்  6,973 ரன்களையும் குவித்துள்ளார். அதில்  இந்திய அணிக்கு எதிராக கொழும்புவில் அவர் அதிரடியாக அடித்த 340 ரன் அவரின் அதிக பட்ச ஸ்கோர் ஆகும்.

Sanath-Jaisurya

அதுமட்டும் இல்லாமல் டெஸ்ட் போட்டியில்  98 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு நாள் போட்டியில்  13,430 ரன்கள் எடுத்துள்ளார். 323 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 629 ரன், 19 விக்கட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இவர் அனைத்து போட்டிகளில் இருந்து ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றார். ஆனால் இவர் அப்பொழுது அதிபராக இருந்த ராஜபட்ச குடும்பத்தினருடன் நெருக்கமாக இருந்ததால் அவருக்கு கிரிக்கெட் வாரியத் தேர்வுகுழு தலைவர் பதவி கிடைத்தது.

Sanath-Jaisurya

இந்த நிலையில் இவரின் நண்பர் ஒருவர் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தார் அதில் ஜெயசூர்யா நடக்க முடியாத நிலையில் உள்ளார் என பதிவிட்டுருந்தார்,அதில் அவரின் மூட்டு பகுதி தேய்ந்து காயம் ஏற்பட்டு தனியாக நடக்க முடியாமல் ஊன்று கொள் வைத்து நடக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Sanath-Jaisurya

இதனால் வெளியிடங்களுக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கிறார் மேலும் அவர் இந்த காயத்திற்கான சிகிச்சைக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகருக்கு அழைத்துச் செல்லப் போகிறார்களாம்.