cricket

என்னதான் ஓய்வறைக்குள் சின்ன சின்ன சச்சரவுகள் இருந்தாலும், அந்த ப்ளூ நிற உடையை அணிந்து கொண்டு களம் இறங்கிவிட்டால், அனைத்தையும் மறந்து எதிரணியை வீழ்த்துவதில் குறியாக இருப்பதில் இந்திய அணி கில்லாடி. அதிலும், கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி பெரும்பாலான போட்டிகளில் வெற்றிகளை மட்டுமே குவித்து வருகிறது.

அப்படிப்பட்ட இந்திய அணியில், சில வீரர்களுக்கு பட்டப் பெயர் உண்டு. சில பெயர்கள் உங்களுக்கு தெரிந்தவையாக இருந்தாலும், அது ஏன் எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்வதில் சுவாரஸ்யம் இருக்கும் தானே.

Virat Kohli – Cheeku

Virat Kohli

இந்திய அணியின் இளம் கேப்டன் விராட் கோலியின் பெயர் தான் சீக்கு. பெரிய சைசிலான காதுகளை கொண்ட கோலி, ஒருமுறை ஷார்ட்டாக முடி வெட்டியிருந்தார். இதை பார்த்த அவரது டெல்லி பயிற்சியாளர்களில் ஒருவர், முயலை போன்று இருப்பதாக கூறி இந்த பெயரைக் கொண்டு அழைத்துள்ளார். அதுமுதல் கோலி, ‘சீக்கு’ என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

MS Dhoni – Mahi

dhoni
dhoni

இது நம்ம தமிழகத்திற்கு மிகவும் பழக்கப்பட்ட பெயர் தான். முன்னதாக, தோனி, ‘Mahe’ என்று அழைக்கப்பட்டார். அதன்பின் மக்கள் ‘மஹி’ என்று அழைக்க, அதன்முதல் அவ்வாறே அழைக்கப்படுகிறார். என்ன இருந்தாலும், ‘தல’ போல வருமா!

அதிகம் படித்தவை:  தனி ஒருவனாக போராடிய சேன் மார்ஸின் போராட்டம் வீண்… சன் ரைசர்ஸிடம் சரணடைந்தது பஞ்சாப்

Ajinkya Rahane – Ajju and Jinx

rahane

இந்த இரண்டு பெயர்களையும் வைத்தது முன்னாள் ஆஸ்திரேலிய லெஜண்ட் ஸ்பின்னர் ஷேன் வார்ன். ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக அஜின்க்யா ரஹானே ஆடிய போது, அவரது பெயரை அழைப்பதில் வார்ன் சிரமப்பட்டாராம். இதனால், அவரே அஜ்ஜூ என்றும் ஜின்க்ஸ் என்றும் பெயர் வைத்துவிட்டார்.

Shikhar Dhawan – Jat and Gabbar

shikhar-dhawan

இதில் ஜட் என்பது தவானின் நல்ல பண்புகளை குறிப்பதாம். கப்பர் என்பது, ‘ஷோலே’ படத்தில் வரும் ஒரு பாத்திரத்தின் பெயராம். அதாவது, ரஞ்சிப் போட்டிகள் ஆடிக் கொண்டிருந்த காலத்தில், எதிரணிகள் சிறப்பாக விளையாடினால், துவண்டு கிடக்கும் தனது அணி வீரர்களுக்கு ஜோக் சொல்லி அவர்களை பூஸ்ட் செய்வாராம் தவான். கப்பர் பாத்திரமும் படத்தில் இதைத்தான் செய்யுமாம். அதனால் தான் இந்த பெயர்.

Suresh Raina – Sonu

raina

உண்மையில் இப்படியொரு பெயர் தனக்கு எப்படி வந்தது என ரெய்னா மிகவும் கன்ஃபியூஷனில் இருந்தாராம். ஒருநாள் மல்லாக்கப்படுத்து விட்டத்தைப் பார்த்து யோசித்துக் கொண்டிருக்கும் போது, எப்போதோ ஒருநாள், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் சோனு என்று கூப்பிட்டாராம். அன்று முதல் இன்று வரை சோனு என்றே ரெய்னா அழைக்கப்படுகிறாராம்.

அதிகம் படித்தவை:  மும்பை அணியை அடித்து துரத்திய பஞ்சாப் அணி..திரில் சாதனை நிகழ்த்தினார்...

Rohit Sharma – Shaana, Hitman and Ro

rohit-sharma

ஷானா என்பது ரோஹித்துக்கு யுவராஜ் சிங் வைத்த பெயர். ரோஹித்தின் ரசிகர்கள், அவரை ‘ஹிட்மேன்’ என்று அழைப்பது வழக்கம். ரோஹித்தின் மனைவி, அவரை ‘ரோ’ என்று அழைப்பாராம். இந்திய வீரர்கள் பலரும் இவரை அப்படித் தான் அழைப்பார்களாம்.

Hardik Pandya – Hairy and Rockstar

hardikpandiya

ஹர்திக் பாண்ட்யா, அடிக்கடி மாற்றும் தனது ஹேர் ஸ்டைலுக்காகவே ஹெய்ரி என்று அழைக்கப்படுகிறார். அதேபோல், எப்போதும் ஸ்டைலாகவும், எனர்ஜியாகவும் இருப்பதால் இவர் ராக்ஸ்டார் என்றும் சக வீரர்களால் அழைக்கப்படுகிறார்.

Yuvraj Singh – Yuvi

யுவராஜின் பெயர் சுருங்கி யுவி என்றாகிவிட்டது.

Ravichandran Aswhin – Ash

யுவராஜை போல, இவருக்கும் பெயர் சுருக்கப்பட்டு ‘அஷ்’ என்றானது. ஆனால், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் இதே பெயர் தானாம்.