Connect with us

Cinemapettai

கிரிக்கெட் உலகின் தாதா கங்குலி வாழ்க்கை திரைப்படமாகிறது.

Sports | விளையாட்டு

கிரிக்கெட் உலகின் தாதா கங்குலி வாழ்க்கை திரைப்படமாகிறது.

கிரிக்கெட் உலகின் தாதா என்றழைக்கப்படும் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.

கிரிக்கெட் மட்டுமல்லாது பொதுவாக விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும் ட்ரெண்ட் பாலிவுட்டில் தற்போது அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகள் திரைப்படமாகி இருக்கின்றன. சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு சச்சின்: ஏ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் படமானது. இது பாலிவுட் ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், சச்சினின் சிறுவயது முதல் அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்தது என பெரும்பாலானவைகள் படமாக்கப்பட்டிருந்தது. இதில் சச்சினே பல காட்சிகளில் நடித்திருந்தார்.

அதேபோல், எம்.எஸ்.தோனி: ஏ அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் தோனியின் வாழ்க்கை படமானது. இதில், தோனியாக பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் நடித்திருந்தார். முழுக்க முழுக்க திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் கோரக்பூர் ரயில் டிக்கெட் செக்கரான தோனி, 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது எப்படி என்பதை விளக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த படத்துக்கும் ரசிகர்கள் அமோக வரவேற்புக் கொடுத்தனர்.

இதையடுத்து, தடகள வீரர் பறக்கும் சீக்கியர் என்றழைக்கப்பட்ட மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாறு பாக் மில்கா பாக் என்ற பெயரில் படமானது. அடுத்து, குத்துச்சண்டு வீராங்கனை மேரி கோமின் வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே திரைப்படமாக வெளிவந்தது. இதில், மேரி கோம் கதாபாத்திரத்தில் பிரியங்கா சோப்ரா நடித்திருந்தார். சச்சின், தோனியைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் திரைப்படமாகத் தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஏக்தா கபூர் கங்குலியைச் சந்தித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இந்திய அணியின் சக்சஸ்புல் கேப்டன்களுள் ஒருவரான கங்குலி, தலைமையிலான இந்திய அணி, கடந்த 2003ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரை சென்றது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் தோற்று, உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இருப்பினும் 1983ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றவர் என்ற பெருமையை கங்குலி பெற்றார்.

அதேபோல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 300க்கும் அதிகமான டார்கெட்டை சேஸ் செய்த போது ஜெர்ஸியைக் கழற்றி சுற்றியது என கங்குலி, தனது மனதுக்கு நெருக்கமான விஷயங்களை சுயசரிதையாக எழுதியிருக்கிறார். ஏ செஞ்சுரி இஸ் நாட் எனஃப் என்ற பெயரில் வெளியான அந்த சுயசரிதைப் புத்தகம் விற்பனையில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த சுயசரிதைப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கங்குலியின் வாழ்வு திரைக்கதையாக்கப்படுகிறது. இந்த தகவலை உறுதிசெய்துள்ள பெங்கால் டைகர் கங்குலி, இதுகுறித்து ஏக்தா கபூருடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை முடித்து விட்டதாகவும், மற்ற விவரங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார். வி ஆர் வெயிட்டிங் தாதா..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top