நேற்றைய தினம் இந்திய மக்களுக்கு கரிநாளாகவே பார்க்க படுகிறது. ஏன் என்றால் மலை போல இருந்த இருவர், வாழும் கடவுளாக இருந்த ஒருவர் மண்ணுக்கு சென்றுள்ளனர். இதில் குறிப்பாக ரதன் டாடாவின் இழப்பு, ஒவ்வொருவருக்கும் மனதில் பாரத்தையும், வழியையும் ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 9 அன்று, மனித கடவுளான ரதன் டாடா உடல்நல குறைவால் காலமானார். மேலும் 10 அன்று, முரசொலி செல்வம் காலமானார். முதல்வரே கலங்கி, நெஞ்சில் அடித்து கொண்டு அழுதது, அனைவருக்கும், கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
என்னதான் முரசொலி செல்வம் அவர்களின் இறப்புக்கு, மக்கள் அஞ்சலி செலுத்தினாலும், ரதன் டாடாவின் இறப்பு, மக்களுக்கு பேரிழப்பாக உள்ளது. அவரை நினைத்து பலரும் நேற்றைய தினம் அழுத்திருப்பார்கள்.
கழுகுக்கு இறையாகிறதா ரதன் டாடாவின் உடல்
பொதுவாக பணக்காரர்களை பார்த்து மக்கள் எக்கப்படுவார்கள், அல்லது பொறாமை படுவார்கள். ஆனால் ரதன் டாடாவை பார்த்து ஏழை எளிய மக்கள் கூட பெருமை பட்டார்கள். அவர் பெரிய தொழிலதிபர் என்ற சொல்லை விட, நல்ல மனிதன் என்ற சொல்லை தான் அதிகம் கேட்டிருப்போம். இந்த நிலையில், அவரின் இறப்பை தொடர்ந்து, பலர் அஞ்சலி செலுத்தி வந்த நிலையில், தேசிய கோடி போர்த்த, குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் அவருக்கு இறுதி சடங்கானது செய்யப்பட்டது.
ரத்தன் டாடா பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். பார்சி மதத்தில் இறுதிச் சடங்குகளுக்கு 3 வழிகள் உள்ளன, அவற்றில் தக்மா ஒன்றாகும். பார்சிகளின் இறுதிச் சடங்கில் மூன்றாவது மரபு தக்மா என்று அழைக்கப்படுகிறது. இந்த மரபில், இறந்த உடல் ஒரு பெரிய கிணறு போன்ற இடத்தில் வைக்கப்படுகிறது. இந்த கிணறு மௌன கோபுரம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிணற்றில் கழுகுகள் மற்றும் பிற மாமிச உண்ணும் பறவைகள் அந்த உடலின் இறைச்சியை உண்கின்றன. இது பார்சிகளின் பண்டைய இறுதிச் சடங்கு மரபாகும். ஆனால் இப்போதெல்லாம் பெரிதாக யாரும் இந்த முறையை கடைபிடிப்பது இல்லை. இப்போதெல்லாம் புதைக்கவோ அல்லது எரிக்கவோ தான் செய்கிறார்கள். ஆனால் உடலை என்ன செய்யவேண்டும் என்பதை உறவினர்களே தீர்மானிக்கிறார்கள். அப்படி, ரதன் டாடாவின் உடலை எரிக்க முடிவு செய்துள்ளனர். அதற்கான சடங்குகளும் மேற்கொள்ளப்பட்டது.