Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல காமெடியன் கிரேசி மோகன் காலமானார்.. அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்
பொய்க்கால் குதிரை படத்தின் டயலாக் ரைட்டராக பணியாற்றியவர் கிரேசி மோகன். அதன் பிறகு அபூர்வ சகோதரர்கள், கதாநாயகன், சின்ன மாப்பிள்ளை போன்ற பல படங்களுக்கு டயலாக் ரைட்டராக எழுதியுள்ளார். அபூர்வ சகோதரர்கள் படத்தின் மூலம்தான் இவர் நடிகராக அறிமுகமானார்.
அதன் பிறகு மைக்கேல் மதன் காமராஜன் ,சின்ன வாத்தியார், இந்தியன் பம்மல் கே சம்பந்தம், வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் கிரேசி மோகன் நடித்துள்ளார். கிரேசி மோகன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கல்யாண சமையல் சாதம். இவருக்கு தமிழ்நாடு அரசாங்கத்திடம் கலைமாமணி விருது வாங்கியுள்ளார்.
சில நாட்களாக கிரேசி மோகன் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது ஹார்ட் அட்டாக்கில் வந்து காப்பாற்ற முடியாமல் சிறிது நேரத்திற்கு முன்பு உயிரிழந்தார். தற்போது பல பிரபலங்களும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
