இந்தியாவில் வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை: உடல் சிதறி 25 பேர் பலி !

இந்தியாவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 25 பேர் உடல் சிதறி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகத் மாவட்டத்தில் முறைகேடாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில், நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

வெடிமருந்து அறையில் ஏற்பட்ட தீயால், விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உடல் சிதறி 25 பேர் பலியாகியுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்ச வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனுமதி இல்லாமல் ஆலை இயங்கியது, தீவிபத்திற்கான காரணம் உள்ளிட்டவை குறித்து, பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.