Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மாதவன் தவறவிட்ட விஜயகாந்த் படவாய்ப்பு.. அதகளபடுத்தி மிரட்டிய அந்த நடிகர்.

vijayakanth madhavan

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வருபவர் நடிகர் மாதவன். இவர் நடித்த அலைபாயுதே, என்னவளே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன், இரண்டு, இறுதிச்சுற்று, மாறா போன்ற பல படங்கள் மூலம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருகிறார்.

ஆனால் மாதவன், கேப்டன் விஜயகாந்த் உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டுள்ளார். விஜயகாந்த் திரை வாழ்க்கையிலே அவருக்கு திருப்புமுனையாக அமைந்த படம் ரமணா. கண்ணுபட போகுதய்யா படத்திற்குப் பிறகு விஜயகாந்த், சிம்ரன் கூட்டணியில் உருவான இப்படம் இரண்டு மாநில விருதுகளைப் பெற்றது.

ரமணா படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படத்தில் கல்லூரி பேராசிரியராக நடித்திருந்த விஜயகாந்த் மாணவர்களை கொண்டு, ஊழல் இல்லாத அரசாங்கத்தை உருவாக்க எடுக்கும் முயற்சிகள் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் இடம்பெறும் ஒவ்வொரு வசனங்களும் பட்டி தொட்டி எங்கும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

ரமணா படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், வங்காளதேசம் மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. ரமணா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கான்ஸ்டபிள் சரவணனாக நடிகர் யுகி சேது நடித்திருந்தார்.

மாதவன் நடித்திருந்தால் கூட இந்த அளவுக்கு பொருத்தமாக நடித்திருக்க முடியுமா, என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது யூகிசேதுவின் மிரட்டலான நடிப்பு. விஜயகாந்த் பலமுறை சூட்டிங் ஸ்பாட்டில் பாராட்டியுள்ளாராம் அதகளபடுத்தி மிரட்டிய நடிகர்.

ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் முதலில் ஒப்பந்தம் செய்தது மாதவன் தான். அதன்பின், ஒரு சில காரணங்களால் மாதவனால் ரமணா படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு யுகி சேது தேர்வு செய்யப்பட்டு அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

Continue Reading
To Top