கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்த பத்தே நாளில் செவிலியர் சவுமியா மர்ம மரண சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதகை அருகே முள்ளித்துறை கிராமத்தை சார்ந்த சவுமியா என்ற பெண் அரசு செவிலியர் கல்லூரியில் நான்கு ஆண்டுகள் படிப்பை முடித்து விட்டு, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்துள்ளார்.

ராமகிருஷ்ணா மருத்துவமனை விடுதியில் தங்கி இருந்து பணிக்கு சென்று வந்துள்ளார். நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு சவுமியா விடுதிக்கு திரும்பியுள்ளார்.

சவுமியாவுடன் தங்கி இருந்த சக செவிலியர்கள் மூவர் ஷாப்பிங் செல்வதாக கூறி சென்றுள்ளனர். சவுமியா மட்டும் விடுதியில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில், ஷாப்பிங் சென்று விட்டு திரும்பிய சக செவிலியர்கள் பூட்டிய அறையை வெகு நேரம் தட்டியும் அறை கதவு திறக்காததால் அறை ஜன்னல் வழியாக பார்த்த போது, அறை உள்ளே சவுமியா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஆதி நடிப்பில் தெலுங்கில் ரீமேக்காகியுள்ள "அதே கண்கள்" பட ட்ரைலர் .

தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சவுமியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இன்று காலை ராமகிஷ்ணா மருத்துவமனை முன்பு திரண்ட சக செவிலியர் மற்றும் சவுமியாவுடன் நான்கு ஆண்டுகள் படித்த மாணவியர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் படித்தவை:  Thirunaal Movie Review - திருநாள் விமர்சனம்

சவுமியா சக மாணவியர் கூறுகையில், சவுமியா தான் உண்டு படிப்பு உண்டு என்று இருப்பார், அவருக்கு காதல் பிரச்சனை எதுவும் இல்லை. அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த பிரச்சனை இல்லை, அவரது சாவில் மர்மம் உள்ளது என கூறி கதறி அழுதனர்.

சவுமியாவின் சாவில் மறைந்துள்ள மர்மத்தை போலீஸார் தோண்டி எடுப்பார்களா? மூடி மறைப்பார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.