lingaa
lingaa

மதுரை ரவிரத்தினம் முல்லைவனம் 999 ஆவணப்பட இயக்குனர் ,இவர் லிங்கா மூலக்கதை, முல்லைவனம் 999 கதை அடிப்படையில் அமைந்துள்ளது. கதை திருட்டு நடந்துள்ளது. லிங்கா மூலக்கதை எனக்கு சொந்தமானது என அறிவிக்க வேண்டும், என மதுரை கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

கீழமை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணையின்போது, ரவிரத்தினம் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ்,முல்லைவனம் 999 கதையுடன், லிங்கா கதையை ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உண்மை தெரிய வரும். லிங்கா கதையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், என்றார்.

லிங்கா படக்குழுவினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், படம் வெளியாகி, நீண்ட காலமாகிறது. வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில், கதையை தாக்கல் செய்ய கூறுகின்றனர். அவசியம் ஏற்பட்டால், கதையை ஒப்படைக்கத் தயார்,” என்றார். தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார். நேற்று, நீதிபதி விஸ்வநாத், லிங்கா படக் கதையை மார்ச் 14ல், இந்நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,” என்றார்.