Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை அமலா பால் நீதிமன்றத்தில் ஆஜராக மறுத்ததால்! கோர்ட் அதிரடி உத்தரவு!
நடிகை அமலா பால் தனது கணவர் விஜயய்யை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இவர் கடந்த ஆண்டு ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வருகிறார்.தமிழ், மலையாளம் படங்களில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் அடுத்ததாக பாஸ்கர் தி ராஸ்கல் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் சொகுசு கார் வாங்கிய விவகாரத்தில் அவரின் மீது வாகன வரி ஏய்ப்பு மோசடி என வழக்கு தொடர்ப்பட்டது. இவர் வாங்கிய கார் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டது என சொல்லப்பட்டது.
இந்நிலையில் போலிஸ் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிமன்ற சம்மன் பல முறை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட அவர் ஆஜராகவில்லையாம். அமலா பால் கைதாகும் நிலையில் இருப்பதால் அவர் முன் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இதை நேற்று விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும் அமலா பால் வரும் 15 ம் தேதி போலிஸ் முன் ஆஜராகி அவரது விளக்கத்தை அளிக்கும் மாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. வரும் 15-ஆம் தேதி ஆஜராகுவரா என தெரியவில்லை.
