வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.. ஆஹா! செக் வச்சுட்டாங்களே

Dhanush: கடந்த வாரம் ஆரம்பித்த நயன்தாரா தனுஷ் பஞ்சாயத்து இன்று வரை சமூக வலைத்தளத்தில் கலை கட்டிக் கொண்டிருக்கிறது. தனுஷ் பக்கத்தில் இருக்கும் நியாயத்தை சொல்ல ஒரு கூட்டம், நயன்தாரா தான் சரி என்று வாதாடும் ஒரு கூட்டம் என ஆளுக்கு ஒரு கருத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று செகண்ட் வீடியோவை உபயோகப்படுத்தியதற்கு 10 கோடி கேட்கிறார் என விக்கியும் நயனும் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டார்கள். டாக்குமென்ட்ரி வெளியான பிறகு நயன்தாரா அக்கா மூன்று செகண்ட் வீடியோ இல்ல 30 செகண்ட் வீடியோ பயன்படுத்தி இருக்கீங்கன்னு வசமாக கலாய்த்து விட்டிருக்கிறார்கள்.

ஆஹா! செக் வச்சுட்டாங்களே

மூன்று பக்க அறிக்கையை விட்ட நயன்தாராவுக்கு தனுஷ் எந்தவித பதிலும் சொல்லவில்லை. அதே நேரத்தில் வந்த வக்கீல் நோட்டீசை மதிக்காமல் நானும் ரவுடிதான் பட காட்சிகளை நீக்காமலேயே டாக்குமென்டரி படமும் ரிலீஸ் ஆனது.

இந்த நிலையில் வக்கீல் நோட்டீசை மதிக்காததால் கேஸ் கோர்ட்டுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று இது குறித்து நயன்தாரா மற்றும் Netflix உடனே பதிலளிக்கும்மாறு உத்தரவிட்டிருக்கிறது.

தனுஷ் தரப்பில் தெளிவாக தங்களிடம் அனுமதி கேட்காமல் இந்த வீடியோவை உபயோகப்படுத்தி இருப்பதாக தங்களுடைய மனுவில் தெரிவித்திருக்கிறார்கள். டாக்குமென்டரி ரிலீஸ் ஆகி மக்களும் பார்க்க ஆரம்பித்து விட்டதால் நயன்தாரா நஷ்ட ஈடாக சில கோடிகளை இலக்க நேரிடும் என தெரிகிறது.

- Advertisement -

Trending News