fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

‘தமிழ்நாடா இல்ல குடிகாரநாடா’ என கேட்டவர் கைது.. போலிசை எச்சரித்த நீதிபதி

tamil nadu

Tamil Nadu | தமிழ் நாடு

‘தமிழ்நாடா இல்ல குடிகாரநாடா’ என கேட்டவர் கைது.. போலிசை எச்சரித்த நீதிபதி

சமீப காலமாக தமிழ்நாடு பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. ஸ்டெர்லைட் போராட்டம், ஹிந்தி திணிப்பு,  மீத்தேன் போராட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்காத நிலையில் பல நாட்களாக மக்கள் அனைவரும் கோரிக்கை விடுத்து வரும் பூரண மதுவிலக்கை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வருகிறது தமிழக அரசு.

இதனை கண்டித்து திருவாரூர் அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்பதாக இளைஞர்கள் மற்றும் மகளிர் தலைமையில் ‘தமிழ்நாடா இல்ல குடிகாரநாடா’ என்ற பேனரை செல்லபாண்டியன் என்ற இளைஞர் வைத்துள்ளார். பேனரை வைத்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பேனர் வைத்த செல்லப்பாண்டி என்ற இளைஞர் மீது வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் நன்னிலம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதி மதுபான கடையை எதிர்த்து பேனர் வைத்தது தவறா என காவல்துறையை கேள்வி கேட்டது மட்டுமின்றி அந்த நபர் செய்தது தவறில்லை என்றும் அது அவரவர் தனிப்பட்ட உரிமை என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை அதையெல்லாம் கண்டுகொள்ளாத காவல்துறையினர் நாட்டு நலனுக்காக போராடி வருபவர்கள் மீது அவதூறு வழக்கு மற்றும் சட்டவிரோத வழக்கு போன்ற பெயரில் கைது செய்து வருவது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பின்பு செல்ல பாண்டியனுக்கு தனது சொந்த செலவில் ஜாமீனில் விடுதலை செய்தார். மேலும் காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

அதிகம் படித்தவை

To Top