செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த ‘மயக்கம் என்ன’ படத்தில் வரும் பாடல் வரிகள் இது  ‘அடிடா அவள….. வெட்டுடா அவள.. இதை எழுதியவர் நடிகர் தனுஷ்,இந்த பாடலைதான் இப்போது மீண்டும் நினைவுபடுத்தி சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பேசியுள்ளனர், அதாவது ,

சுவாதி படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் அது தொடர்பான தங்களது கருத்துக்களை கோபத்தோடு வெளிப்படுத்தினார்கள்.

‘அடிடா அவளை வெட்ரா அவளை’ என்றெல்லாம் பாட்டுக்கள் சினிமாவில் வருகின்றன. அதை விட மோசமாகவும் வருகின்றன. இதையெல்லாம் இந்த அரசு தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதா? அதுதொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைதான் என்ன? பெண்களை மோசமாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலுமான இது போன்ற பாடல்களை ஏன் அரசு அனுமதிக்கிறது?

நீதிபதிகள் இவ்வாறு கேட்டதும் நீதிமன்றம் பரபரப்பானது..