திங்கட்கிழமை, டிசம்பர் 9, 2024

ஜெயம் ரவி விவாகரத்து cancel.. ஆர்த்திக்கு என்னாச்சு!

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009ஆம் ஆண்டு பதிவு செய்த எங்களின் திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனவும் நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இது கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக ஜெயம் ரவிக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் இருவரும் சில நாட்கள் தனித்தனியே வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் மாமியார் தான் காரணம். அவர் பொய்யான நஷ்டக்கணக்கை காட்டி, தன் கட்டுக்குள் ஜெயம்ரவியை வைத்திருக்க நினைத்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஆர்த்தி, ஜெயம் ரவிக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும், வீட்டு பணியாட்கள் முன்பு வைத்து அவமானப்படுத்தியதாகவும் அவரே கூறியிருந்தார். இப்படி இருக்கும் சூழ்நிலையில், விவாகரத்து தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து வருகிறார் ஆர்த்தி.

ஆர்த்திக்கு உடல் நலம் சரி இல்ல

ஒருபக்கம் விவாகரத்து தொடர்பான பிரச்சனைகள் இருந்தாலும், ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் நடிப்பது குறித்தும், இயக்குநர் அவதாரம் எடுப்பது குறித்தும் அப்டேட்டுகளை வழங்கி வந்தார். இந்த நிலையில், ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து மனு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

அப்போது ஜெயம் ரவியிடம் 10 நிமிடங்கள் ஆர்த்தி பேசியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் சமரசப் பேச்சு வார்த்தையை தள்ளி வைக்க வேண்டும் என ஆர்த்தி கோரிக்கை வைத்தார்.

அதன்படி தற்போது, தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்து வழக்கை தள்ளுபடி செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அடுத்த வழக்கு நவம்பர் 27 அன்று விசாரணைக்கு வரும் நிலையில், அன்று சமரச பேச்சுவார்த்தையை பொறுத்தே, அடுத்த முடிவுகள் வரும்.

- Advertisement -

Trending News