Bigg Boss 7: பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுவிடும். அதிலும் ரியாலிட்டி ஷோவாக வரும் பிக் பாஸ் அனைவரது ஃபேவரிட் ஆக மாறிவிட்டது. அந்த வகையில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற சீசன் 7 ஒவ்வொரு நாளும் பார்ப்பவர்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வருகிறது.
இதை என்னதான் மக்கள் விரும்பி பார்த்து வந்தாலும் சில விஷயங்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு சீசன்களிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை காதல் செய்யும் பார்க்கவே மாற்றி இருக்கிறார்கள். அதில் ஓவியா ஆரவ், மகத் யாஷிகா, கவின் லாஸ்லியா, அமீர் பவானி இவர்கள் அனைவரும் பிக் பாஸை மேட்ரிமோனியாகவே நினைத்து வந்தார்கள்.
இவர்களைத் தொடர்ந்து இந்த சீசனில், வந்ததிலிருந்து எங்கு பார்த்தாலும் ஜோடிகளாக சுற்றி வருகிறார்கள் ரவீனா மணி. எப்ப பார்த்தாலும் இவர்கள் இரண்டு பேரும் தான் ஒன்றாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் எல்லோரும் தூங்கிய பிறகும் நேரம் போனதே தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல் யாரும் எழுந்திருப்பதற்கு முன்னாடியே காலை 5 மணிக்கு எழுந்து மறுபடியும் இவர்களுடைய திருவிளையாடலை ஆரம்பித்து விடுகிறார்கள். இப்படி இரவும் பகலும் தெரியாமலேயே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அட்டூழியம் செய்து வருகிறார்கள் இந்த ஜோடிகள். தற்போது இவர்களை பார்த்து புதிதாக ஒரு ஜோடி சேர இருக்கிறது.
அதாவது ஆரம்பத்தில் மக்களின் பேவரைட் போட்டியாளராக இருந்தவர்கள் நிக்சன் மற்றும் ஐசு. அப்படிப்பட்ட இவர்கள் தற்போது மணி மற்றும் ரவீனாவின் அலம்பலை தாங்க முடியாமல், அவர்களை எரிச்சல் படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே இவர்கள் புதிதாக ஜோடி சேர்வதாக தெரிகிறது. அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்வதற்காக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.
இதெல்லாம் எப்படி தினமும் பார்த்து சகித்துக் கொள்ள முடியும் என்று மக்கள் ஒரு பக்கம் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள். இதனால் புதிதாக தலைவர் பதவியை எடுத்த பூர்ணிமா மணி மற்றும் ரவீனாவை பிரிக்கும் விதமாக மணியை சின்ன பிக்பாஸ் ஹவுஸில் போட்டு விட்டார். ஆனாலும் நாங்கள் எங்க போனாலும் எங்களுடைய சேட்டை இப்படித்தான் இருக்கும் என்று நிரூபித்து வருகிறார்கள். இப்படி எல்லாத்தையும் பண்ணிட்டு யாருக்கு என்ன நடந்தா என்ன நமக்கு டிஆர்பி வந்தா போதும் என்று கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது பிக் பாஸ்.