காதலை விட்டுக்கொடுத்த கேப்ரில்லா.. குற்ற உணர்வில் பரிதவிக்கும் குடும்பம்

விஜய் டிவியில் மதிய நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும் ரசிகர்களை கவர்ந்த தொடர் ஈரமான ரோஜாவே. இத்தொடரின் வெற்றியை தொடர்ந்து புதிதாக ஈரமான ரோஜாவே 2 தொடர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் கேப்ரில்லா, திரவியம், சித்தார்த், சுவாதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இத்தொடரின் முதல் ப்ரோமோ வெளியானபோதே பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்தது. ஈரமான ரோஜாவே 2 தொடரில் அண்ணன் பார்த்திபனுக்கு, பிரியா என்ற பெண்ணை குடும்பத்தினர் நிச்சயம் செய்கின்றனர். இதற்கு முன்னதாகவே தம்பி ஜீவாவும், பிரியாவின் தங்கை காவியாவும் காதலிக்கின்றனர்.

இந்நிலையில் திருமண மண்டபத்தில் மணபெண்ணை சில ரவுடிகள் கடத்தி செல்கின்றனர். இதனால் செய்வதறியாத பெண்ணின் அப்பா காவியாவை பார்த்திபனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். அதன்பிறகு பிரியாவை அழைத்து வரும் ஜீவாவைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பின்பு, ஜீவாவுக்கு பிரியாவை திருமணம் செய்து வைக்கின்றனர். மேலும் காவியா தனது காதலை மறக்க முடியாமல் தவிக்கிறாள். ஆனால் இவர்கள் ஏற்கனவே காதலித்த விஷயம் குடும்பத்திற்கு தெரிந்தால் என்னவாகும் என பல அதிரடி திருப்பங்களுடன் இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் காவியாவின் அம்மா அவரது துணிகளை எடுத்து வைக்கும் போதும் காவியா, ஜீவாவை காதலித்த உண்மை தெரியவருகிறது. மேலும் காவியா தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கதறி அழுததை நினைவு கூறுகிறார்.

மிகப்பெரிய தவறு செய்துவிட்டோம் என காவியா அம்மா வருந்துகிறார். மேலும், தான் காதலித்தவனும் ஒரே வீட்டில் இருந்தால் அவளால் தன் கணவரோடு எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என யோசிக்கிறார். அதன் பின்பு இந்த இரண்டு ஜோடிகளுக்கும் எப்படி காதல் மலருகிறது என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் வரக் காத்திருக்கிறது.