fbpx
Connect with us

Cinemapettai

கள்ளக்குறிச்சி எம்பியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை!

Tamil Nadu | தமிழ் நாடு

கள்ளக்குறிச்சி எம்பியின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கம்.. அமலாக்கத்துறையின் அதிரடி நடவடிக்கை!

கள்ளக்குறிச்சியில் திமுக எம்பியாக பணியாற்றி வருபவர் தான் திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான எம்பி கௌதம சிகாமணி.

மேலும் இவர் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டி வருவதாக வழக்கு தொடரப்பட்டது.

இவ்வாறிருக்க தற்போது சிகாமணியின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெறாமல் அந்நிய நாடுகளில் முதலீடு செய்ததால் அந்நிய செலாவணி சட்டத்தின் கீழ் சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை  நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் அமலாக்கத் துறை நடத்திய விசாரணையின்போது சிகாமணி, தான் வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாய் ரூபாய் 7.05 கோடியை மறைத்து வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கௌதம சிகாமணிக்கு சொந்தமான, அசையும் மற்றும் அசையாத சொத்துக்கள்என சுமார் ரூபாய் 8.6 கோடி மதிப்பிலான சொத்துக்களை அன்னிய செலவாணி சட்டத்தின்கீழ் முடக்கி அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது அமலாக்கத்துறை.

gowthamasingamani-kallaikurichi

gowthamasingamani-kallaikurichi

Continue Reading
To Top