Tamil Nadu | தமிழ் நாடு
கொரோனா வைரசால் இதை எல்லாத்தையும் இழுத்து மூடுங்க.. அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு
உலக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸ் இதுவரை 6000 மேலான உயிர் பலி வாங்கியுள்ளது. அதில் ஐரோப்பாவில் மட்டும் 2,000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 110 பேர் கொரோன வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒருவர் வைரஸால் பாதிக்கப்பட்டு அவரும் குணம் அடைந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

corona
மக்களை அச்சுறுத்தும் இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லையோர உள்ள மால், பள்ளிக்கூடங்கள், தியேட்டர் உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது கேரளாவில் அதிகமான அளவில் வைரஸ் பரவி வருவதால் எல்லையோர மக்களை பாதுகாக்க வேண்டும், அதன் மூலம் வைரஸ் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதால் போலீஸ் பாதுகாப்புடன் அரசு இதை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் வேண்டிய அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வைரஸ் விழிப்புணர்வுக்காக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அமைச்சர் விஜயபாஸ்கர் ஏர்போர்ட், மருத்துவமனை என்று முக்கியமான இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இதனால் மக்கள் எந்த ஒரு பீதி அடையாமல் வதந்திகளை நம்பாமல் தமிழக அரசின் பதிவுகளை நம்பினால் மட்டும் போதும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களை பாதுகாக்கும் நல்ல தலைவனாக விஜயபாஸ்கர் தெரிவதாக சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் உடனடியாக பள்ளிகள், தியேட்டர்கள், மால்கள் மூடப்பட்டுள்ளது. மீறி திறந்தாள் அரசுக்கு தெரிவிக்கும் படி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் முழு பரிசோதனையில் ஈடுபட்ட பின் தான் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த வைரசால் அடித்தட்டு மக்கள் அவரை பாதிக்கப்படுவார்கள் சினிமா துறை, விளையாட்டுத்துறை, கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் என்று அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூக்கு, கண், வாய்களை அடிக்கடி கைகளால் தொடுவதால் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவை நன்கு கைகளைக் கழுவி விட வேண்டும்(கை கழுவுவதற்கு பயன்படுத்தும் லிக்யூட் அல்லது சோப்பில் ஆல்ககால் கண்டன் இருப்பது அவசியம்) . தும்மல் போடும் போது ஒரு அடி தூரம் விலகி இருப்பது நல்லது.
மாநில மொழிகளில் கொரோன வைரஸ்க்கான காலர் டியூன் மாற்றப்பட வேண்டும் என்று இணையதளத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கை தற்போது தமிழக அரசின் காதுக்கு கேட்டுள்ளது உண்மைதான். தமிழில் கொரோன வைரஸின் காலர் ட்யூன்களை கேட்கமுடிகிறது அதுவும் தற்போது அடித்தட்டு மக்கள் வரை சென்றடைவதற்கு உதவியாக உள்ளது.
- திருவள்ளூர்
- வேலூர்
- கிருஷ்ணகிரி
- தர்மபுரி
- ஈரோடு
- நீலகிரி
- கோவை
- திருப்பூர்
- திண்டுக்கல்
- தேனி
- விருதுநகர்
- நெல்லை
- கன்னியாகுமரி
- தென்காசி
