Connect with us

Cinemapettai

கொரோன வைரஸ் காலர் டியூன் – வடிவேலு வெர்சன்.. நேசமணியை போல் வைரலாகும் வீடியோ

vadivelu-corona

Videos | வீடியோக்கள்

கொரோன வைரஸ் காலர் டியூன் – வடிவேலு வெர்சன்.. நேசமணியை போல் வைரலாகும் வீடியோ

உலக அளவில் நடுங்க வைத்துள்ள கொரோன வைரஸ் தற்போது தமிழகத்திலும் வந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று மத்திய மற்றும் மாநில அரசுகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்தியா முழுவதும் அலுவலகங்களில் பயோமெட்ரிக் சிஸ்டம்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு பார்க்க வரும் ஊழியர்கள் அனைவரும் சோதிக்கப்பட்டு பின்பு அலுவலகத்திற்கு உள்ளே செல்கிறார்கள்.

நேற்றைய தினத்தில் இருந்து நாம் மொபைல் போனில் தொடர்பு கொண்டாள் கொரோன வைரஸ்கான எச்சரிக்கை வாய்ஸ் ரெக்கார்டிங் மற்றும் தற்காப்புக்கான செயல்முறைகள் நம்மளால் முழுமையாக கேட்க முடிகிறது. இதனால் மக்கள் 100% விழிப்புணர்வுடன் இருப்பார்கள் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை.

ஒரு நாளைக்கு 50 கால்களுக்கு மேலே செய்யும் நபருக்கு இது இடையூறாக இருக்கலாம் அதற்காக கால் செய்த பின் # அல்லது ஒன்றை அழுத்தினால் இந்த சேவை நின்று கால் ரிங்கிங் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வாய்ஸ் ரெக்கார்டிங் வடிவேலு வெர்ஷனில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது கிண்டல் செய்வது போன்று ஒருபுறம் இருந்தாலும் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு கண்டிப்பாக உதவும் என்ற நோக்கத்தில் நாங்கள் வெளியிடுகிறோம்.

வடிவேலுவின் பிரண்ட்ஸ் படத்தில் வந்த சுத்தியல் வெறும் காமெடி காட்சி நேசமணி என்ற கதாபாத்திரத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. இதே போல் இந்த வீடியோவும் விழிப்புணர்வு வீடியோவாக வெளிவந்துள்ளது வரவேற்பு பெற்று வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top