India | இந்தியா
நிதி கொடுப்பதற்கு ஏன் இவளோ தாமதம்.. இந்த காரணம் தெரிஞ்சாதான் தளபதி அருமை புரியும்
உலகத்தையே புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மெல்ல மெல்ல நாட்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது.
முதலமைச்சர் மற்றும் பிரதமர் நிவாரண நிதிக்கு பிரபலங்கள் பலர் உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில் தளபதி விஜய் மிகவும் தாமதமாக உதவி செய்துள்ளார் எதற்காக என்று கேள்வி இணையதளத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதில் மறைந்திருக்கும் உண்மை சம்பவம் என்ன என்பதை வெளிப்படுத்தும் விதமாக விஜய்யின் நெருங்கிய நண்பர் ஒருவர் இதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதாவது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது தளபதி விஜயின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது, அதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல் உடனடியாக தளபதி விஜய் சென்னைக்கு திரும்பினார்.
அவரது பேங்க் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது, இந்த சூழ்நிலையில் ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே தளபதி விஜயின் பேங்க் அக்கவுண்ட் ரிலீஸ் செய்வது குறித்து வருமான வரித்துறைக்கு விஜய் கடிதம் எழுதி, அவர்களின் அனுமதியைப் பெற வேண்டி இருந்தது. அதில் ஏற்பட்ட தாமதம் தான் ஏப்ரல் 22ஆம் தேதி விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்தார்.
அரசியல் உள்நோக்கு இருக்கலாம் என்று இணையதளத்தில் விவாதங்கள் நடைபெற்றது இந்த வருமான வரி சோதனையில், விஜய் மன உளைச்சலில் இருந்தார் என்பதற்கு மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் எதுவுமே அவர் பேசவில்லை.
இந்த கால தாமதம் அவரின் பேங்க் அக்கவுண்ட் முடக்கப்பட்டது மட்டுமே காரணம். அதைத்தவிர எந்த ஒரு உள்நோக்கம் இல்லை என்று அவர் நண்பர் கூறியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
ஏனென்றால் தவறான கருத்துக்கள் இணையதளத்தில் வெளிவந்து தளபதியின் இமேஜ் குறைந்து கொண்டிருந்த சூழ்நிலையில் தமிழ்நாடு மட்டுமில்லாமல் அண்டை மாநிலத்திற்கும் உதவி செய்து வெறித்தனமான விஸ்வாசத்தை காண்பித்தார் என்றே கூறலாம்.
இது என்னடா சோதனை கொடுத்தாலும் குத்தம் கொடுக்காவிட்டாலும் குத்தமா.? தளபதி என்னதான் பண்றது. ஆனால் எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டார் அதுதான் தளபதியின் பாலிசி.
