India | இந்தியா
ஒரு பாக்கெட் இலவச கோதுமை மாவு.. உள்ளே 15000 பணம்.. அமீர்கான் கொடுத்ததாக வந்த வீடியோவால் பரபரப்பு
டெல்லியில் ஊரடங்கு உத்தரவால் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட் கொடுத்ததாகவும் அதில் 15000 பணம் வைக்கப்பட்டிருந்த செய்தி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு முழு முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் 1885 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் 1020 வரை குணப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறமிருக்க சினிமா பிரபலங்கள் கோடி கோடியாக நிதி உதவி அளித்து கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். டெல்லியில் ஊரடங்கில் கஷ்டப்பட்ட மக்களுக்கு கொடுக்கபட்ட ஒரு கிலோ கோதுமை மாவில் 15 ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
ஒரு கிலோ கோதுமை மாவு பத்தாது எனக் கூறி வேண்டாம் என்று கூறிய மக்கள் இதில் நிறைய பேர் உண்டாம். ஆனால் இந்த மாவு இருந்தால் கூட இரண்டு நாட்கள் சமாளித்து விடுவோம் என்று வாங்கி சென்றவர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சிதான்.

amir-khan-cinemapettai
தற்போது இந்த உதவியை யார் செய்தார் என்று சமூகவலைதளத்தில் பெரும் கேள்விக்கு மேல் கேள்வி எழுந்துள்ளது. இதனை அமீர்கான் தான் செய்தார் என்ற டிக்டாக் வீடியோ வெளிவந்து பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஆனால் அமீர்கானிடமிருந்து இதைப் பற்றி எந்த ஒரு உறுதியான விளக்கம் அளிக்கப்படவில்லை இதனால் ரசிகர்கள் குழம்பிப் போயுள்ளனர்.
