Tamil Nadu | தமிழ் நாடு
கொரோனா – ஊரடங்கு நிகழ்வு கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கொரோன வைரஸ் பரவாமல் இருக்க பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று ஊரடங்கு நிகழ்வு பிறப்பித்துள்ளது. இதனால் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது.

corona-vijayabaskar
இதே முயற்சியை மக்களுக்கு இத்தாலியில் தெரிவித்ததாகவும் ஆனால் அவர்கள் இதனை பொருட்படுத்தாமல் இருந்ததால் ஆயிரக்கணக்கில் உயிர்பலி ஆனது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் முழு முயற்சியினால் இந்த வைரஸ் உடன் போராடுவதற்காக இன்று பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்ட ஊரடங்கு நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Beach-virus
மக்கள் அத்தியாவசியமான விஷயங்களுக்கு வெளியே செல்லலாம் முக்கியமாக மருத்துவ சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு தற்போது இந்த கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது அதாவது 23ம் தேதி நாளை காலை 5 மணி வரை இந்த ஊரடங்கு உத்தரவு இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக செய்தியை வெளியிட்டுள்ளது.

corona-virus-update
