fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா.. இந்த தேதியில் தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு

edappadi palanisamy

Tamil Nadu | தமிழ் நாடு

மீண்டும் தலைவிரித்தாடும் கொரோனா.. இந்த தேதியில் தமிழக முதல்வர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் கொரானா தொற்று காரணமாக தற்போது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. 28-ஆம் தேதி அன்று மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தமிழக அரசு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் ஒன்று பரவியுள்ளது. அதனால் அந்த நாட்டு மக்களுக்கு 7 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த நபரை தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அவரை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டியூட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலை சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிவிப்பில் பிரிட்டனில் இருந்து வந்த 1800 பேருக்கும் கொரானா பரிசோதனை செய்யப்படும் மேலும் கொரானா தொற்று உறுதி செய்த நபரை தனிமைப்படுத்தி உள்ளதால் மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 28ம் தேதியன்று மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி ஊரடங்கு பற்றிய தகவலை தெரிவிப்பார் என தெரிகிறது. ஆனால் கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகள் விரைவில் வர உள்ளதால் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பதாக இருந்தால் தியேட்டர்கள் அனைத்தும் மூட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். மேலும் அனைத்து படங்களும் OTT தளத்தில் தான் வெளியாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ott platforms cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top