சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டலை சுற்றி வளைத்த கொரோனா.. எண்ணிகையை பார்த்து கதிகலங்கிப்போன சுகாதாரத்துறை!

சென்னையில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டல் தற்போது கொரோனா ஹாட்ஸ்பாடாக மாறியுள்ளது. சென்னை கிண்டியில் அமைந்துள்ள கிரான்ட் சோழா நட்சத்திர விடுதியில் 15 நாட்களில் 85 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது.

நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்களுக்கும், ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர்களுக்கும் மூலம் கொரானா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் கொரனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளனர்.

ஊழியர்கள் மற்றும் ஹோட்டலில் தங்கியிருந்த விருந்தினர் உட்பட கிட்டத்தட்ட 600 பேருக்கு கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 85 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐடிசி கிரான்ட் சோழா ஹோட்டலில் பணியாற்றிய கொரானா தொற்று உறுதியான ஊழியர்களின் வீடுகளின் அருகாமையில் காய்ச்சல் முகாமிட்டு தற்போது அங்கு சுற்று வட்டார பகுதிகளில் கொரானா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் ஐடிசி ஹோட்டல் 14 நாட்களுக்கு எந்த ஒரு விழாவையும் நடத்தக்கூடாது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அனைத்து ஹோட்டல்களிலும் கொரானா பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

grand-chola-itc
grand-chola-itc
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்