India | இந்தியா
கண்டுபிடித்தவரையும் கொன்ற கொரானா.. நடுக்கடலில் தத்தளிக்கும் கப்பல் பயணிகள்
உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த cruise என்ற கப்பலில் வைரஸ் தாக்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
அந்தக் கப்பலில் பயணித்த 3700 பரிசோதிக்கப்பட்டது 61 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமாக 86 பேருக்கு ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக தெரிகிறது.
சீனாவில் இந்த வைரஸை முதன்முதலாக கண்டுபிடித்த மருத்துவர் இதனால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தாக்கிய யாராயிருந்தாலும் குற்றவாளியைப் போல் அடித்து இழுத்துச் செல்லும் காட்சியை பார்க்கும்போது மனதை பதற வைக்கிறது.

corona
சீனாவில் உண்மையான செய்திகளை வீடியோ எடுத்து ஒளிபரப்பும் மக்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதனால் உண்மை நிலவரம் என்ன என்பது இதுவரை யாராலும் கணிக்க முடியவில்லையாம்.
தமிழ்நாடு மட்டும் இந்தியாவில் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதால் தற்போது வரை எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் இருக்கிறோம் என்று பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்தியா முழு முயற்சி எடுத்து மற்ற நாடுகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக அழைத்து வருகின்றனர் என்பது பாராட்டுக்குரியது தான்.
