சினிமாவில் அறிமுகப்படுத்திய SP பாலசுப்பிரமணியத்தை இதுவரை வந்து பார்க்காத அஜித்! இதுதான் நன்றிக்கடனா?

கொரோனா பாதிப்பினால் சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த உள்ள எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியதால் கின்னஸ் சாதனை படைத்தவர் எஸ் பி பாலசுப்ரமணியம். அதுமட்டுமில்லாமல் 6 நேஷனல் விருதுகளை பெற்றுள்ளார்.

கன்னடா, தெலுங்கு, தமிழ், இந்தி என்று அனைத்து மொழிகளிலும் புகழ்பெற்றவர் என்றே கூறலாம். தல அஜித் 50 படங்களுக்கு மேல் நடித்து இந்திய அளவில் ரசிகர்களை கொண்டுள்ளவர்.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக எஸ் பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தல அஜித் இதுவரை அவரை வந்து சந்திக்க வில்லை என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்று தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் தல அஜித்துக்கு முதல் பட வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது எஸ் பி பாலசுப்பிரமணியம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தல அஜித் கண்டிப்பாக தொலைபேசியில் அவரது மகன் எஸ்பிபி சரண் ஐ தொடர்பு கொண்டு விசாரித்து இருப்பார் என நம்பலாம் என்கிறது சினிமா வட்டாரம்.